மிகவும் பரந்து விரிந்த பரப்பினைக் கொண்ட இந்திய தத்துவம் வேதகாலத்திற்கு முன்பிருந்தே ஆரம்பமாகிறது. அதன் பின் உபநிடதம், பகவத்கீதை, பௌத்தம், சமணம் ஆகிய தத்துவங்கள் இந்திய மெய்யியலுக்குப் புதிய பரிமாணங்களையும், செழுமையையும் சேர்த்தன. அதன் பின்னர் சடக் கொள்கை, பிற்கால பௌத்தம், நியாயவைசேடிகம், சாங்கியயோகம், பூர்வமீமாம்சை, வேதாந்தம் போன்ற தரிசனங்களாக இந்திய மெய்யியல் இன்னும் விரிவு பெற்றது. பேராசிரியர் எம்.ஹரியண்ணா அவர்களுடைய இந்த நூல் மேற்குறித்த தத்துவங்களையும், தரிசனங்களையும் மிக விளக்கமாக ஆய்வு செய்கின்றது. இந்திய மெய்யியல் தொடர்பாக இதுவரை எழுதப்பட்ட பாடநூல்களில் ஹரியண்ணாவின் “இந்திய மெய்யியல்” எனும் இந்நூல் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்டது.